மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
249 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
249 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
249 days ago
மலையாள சினிமாவின் முன்னணி நடிகை நிமிஷா சஜயன். 'சித்தா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், அதன்பிறகு ஜிகர்தண்டா டவுள் எக்ஸ், மிஷன் சேப்டர் 1 படங்களில் நடித்தார். தற்போது அவர் 4வதாக நடிக்கும் 'என்ன விலை' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது.
கலாமயா பிலிம்ஸ்சார்பில் ஜிதேஷ் இது. சஜீவ் பழூர் இயக்குகிறார். கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி உள்பட பலர் நடிக்கிறார்கள் ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் சஜீவ் கூறியதாவது: திறமையான அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் உருவாகும். சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் பாணியில் படம் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது என்றார்.
249 days ago
249 days ago
249 days ago