மனைவிக்காக மாரி செல்வராஜ் எடுத்த முடிவு
ADDED : 286 days ago
மாமன்னன், வாழை படங்களுக்கு பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்த படம் கபடி விளையாட்டு வீரரை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். பைசன் படத்திற்கு பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் மாரி செல்வராஜ்.
இந்த நேரத்தில் மாரி செல்வராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை போன்று காதல் கதையில் ஒரு படத்தை இயக்குமாறு எனது மனைவி என்னிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதனால் சமூக பிரச்னைகள் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காதல் கதையில் ஒரு படத்தை எடுத்து காட்டுவேன் என்று தனது மனைவியிடத்தில் சபதம் செய்திருப்பதாக கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.