உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிடி ரிட்டர்ன்ஸ் 2 படம் பற்றிய அப்டேட்

டிடி ரிட்டர்ன்ஸ் 2 படம் பற்றிய அப்டேட்

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் தில்லுக்கு துட்டு 3வது பாகம் ' டிடி ரிட்டர்ன்ஸ்' எனும் பெயரில் வெளியானது. இதனை ராம்பாலாவின் உதவி இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கினார். இப்படம் ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது.

அதைத்தொடர்ந்து மீண்டும் பிரேம் ஆனந்த் , சந்தானம் கூட்டணியில் 'டிடி ரிட்டர்ன்ஸ்' 2ம் பாகம் உருவாகிறது என்றும் இதனை நடிகர் ஆர்யா தயாரிக்கின்றார் என அறிவித்தனர். அதன்பிறகு இந்த படம் குறித்து எந்த வித அப்டேட் வெளியாகவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பை சென்னை மற்றும் புதுச்சேரியில் பிரமாண்டமான கப்பலில் கிட்டத்தட்ட முழு படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறதாம். கடந்த பாகங்கள் பெரும்பாலும் ஒரே வீடு அல்லது பங்களாவில் நடைபெற்றது. தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனால் இந்த படத்தின் டீசரை பொங்கல் பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !