மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
268 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
268 days ago
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பாளர் தில் ராஜூ அவரது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். தமன் இசையமைக்கிறார் .
இப்படம் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி ஜனவரி 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராம் சரண், ஷங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனால் இதில் கியாரா அத்வானி கலந்து கொள்ளவில்லை.
கியாரா அத்வானி உடல்நிலை சரியில்லாத காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல் பரவியது. ஆனால் இதனை கியாரா அத்வானியின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், கியாரா அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கபடவில்லை. அவருக்கு தொடர் வேலை காரணமாக சோர்வு ஏற்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார்'' என தெரிவித்துள்ளார் .
268 days ago
268 days ago