கூடுதல் நேரத்துடனான 'புஷ்பா 2' வெளியீடு தள்ளி வைப்பு
ADDED : 316 days ago
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'புஷ்பா 2' படத்தின் வசூலை 2000 கோடியைக் கடக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதனால் கூடுதலாக 20 நிமிடக் காட்சிகளை இணைத்து, அவற்றுடன் ஜனவரி 11 முதல் திரையிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், ஒரே நாளில் அந்த முடிவு மாற்றப்பட்டு, அதை ஜனவரி 17க்கு தள்ளி வைத்துவிட்டார்கள். தொழில்நுட்பக் காரணம்தான் அதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், நாளை ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படமும், 12ம் தேதி பாலகிருஷ்ணா நடித்துள்ள 'டாகு மகாராஜ்', 14ம் தேதி வெங்கடேஷ் நடித்துள்ள 'சங்கராந்தி வஸ்துனம்' படங்கள் வெளிவருவதால்தான் 'புஷ்பா 2' கூடுதல் காட்சி வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.