உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இட்லி கடை படம் எமோஷனலாக இருக்கும் - நித்யா மேனன்

இட்லி கடை படம் எமோஷனலாக இருக்கும் - நித்யா மேனன்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை படம் இந்த பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் நித்யா மேனன். அப்போது அவர் அடுத்து தனுஷ் இயக்கத்தில் நடித்து வரும் 'இட்லி கடை' படத்தை குறித்து கேள்வி எழுந்தது.

அதற்கு, நித்யா மேனன் கூறியதாவது, காதலிக்க நேரமில்லை படத்திற்கு நேர் எதிர்மறையாக 'இட்லி கடை' படம் இருக்கும். அப்படத்திற்காக ஆர்வமாக இருக்கிறேன். எதையுமே திட்டமிடாமல் இருக்கும்போது, அது தானாக நடக்கும். அப்படமும் இதே ஆண்டில் வெளியாகிறது என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது. அப்படியொரு கதாபாத்திரத்தில் என்னை பார்ப்பீர்கள், யாராலும் யூகிக்கவே முடியாது. நித்யா மேனனை இப்படியும் பார்க்கலாமா என்று இருக்கும். ரொம்பவே உணர்ச்சிகரமான, எமோஷனலான படம். அப்படம் பார்த்தவர்கள் அழுதுவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !