மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
262 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
262 days ago
சினிமாவை தாண்டி நடிகர் அஜித்திற்கு கார் ரேஸில் அதிக ஆர்வம் உண்டு. ஏற்கனவே 2002, 2003, 2004 ஆண்டுகளில் கார் ரேஸில் பங்கேற்றார். பின்னர் சினிமாவில் தொடர்ந்து பயணித்தார். இந்நிலையில் துபாயில் நடந்து வரும் '24எச்' ரேஸில் அஜித் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றுள்ளது. இதற்காக கடந்த சில தினங்களாக அஜித்தும், அவரது அணியினரும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று நடந்த தகுதி சுற்று போட்டியிலும் அவரும், அவரது அணியும் பங்கேற்றனர். அதில் இருதினங்களுக்கு முன் நடந்த பயிற்சியில் அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்திற்கு உள்ளானது. ஆனாலும் தொடர்ந்து அவர் பயிற்சில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ரேஸில் இருந்து அஜித் விலகுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இதுதொடர்பாக அஜித் குமாரின் ரேஸிங் அணி சார்பில் வெளியிட்ட அறிக்கை : ‛‛பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்து, உடல் நலன் மற்றும் அணியின் நலனைக் கருத்தில் கொண்டு துபாய் 24H கார் ரேஸில் இருந்து அஜித் விலகுகிறார்.
மிகவும் தீவிரமான ஆலோசனைக்கு பிறகு, துபாய் 24 எச் ரேஸில் இருந்து அஜித்குமார் விலகுவது என்ற கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, அவரின் தனிப்பட்ட லட்சியங்களை தாண்டி அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
அஜித் குமார் ரேஸிங் சார்பில் 414, 901 என இரு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒரு அணியில் மட்டும் ரேஸராக அஜித் பங்கேற்கவிருந்த நிலையில் தற்போது விலகியுள்ளார். எனினும் அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார். கடினமான மற்றும் தன்னலமற்ற இந்த முடிவை அஜித்தே எடுத்துள்ளார். அஜித் அணி தொடர்ந்து ரேஸில் போட்டியிடும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
262 days ago
262 days ago