‛கேம் சேஞ்ஜர்' படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு!
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛கேம் சேஞ்ஜர்'. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், ‛கேம் சேஞ்ஜர் படம் ஷங்கர் சாரின் பிரமாண்டமான மாஸ் அதிரடி படமாக உள்ளது. அதிரடியான அரசியல் பஞ்சுகள் மிகவும் ரசிக்க வைத்துள்ளது. ஷங்கரின் இந்த பிரமாண்ட படத்தில் ஒரு சிறிய பகுதியாக இருக்க எனக்கு அனுமதி கொடுத்ததற்கு நன்றி. இந்த படத்தில் ராம்சரண், எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவாளர் திருவின் கேமரா பணியும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்கள்.