அறிமுக இயக்குனருடன் இணைந்த விக்ரம் பிரபு!
ADDED : 301 days ago
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் மற்றும் இளைய திலகம் பிரபுவின் மகன் என்கிற பெரும் பெயரோடு அறிமுகமானவர் விக்ரம் பிரபு. ‛கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி' என தொடர் வெற்றி படங்களில் நடித்தவர் விக்ரம் பிரபு. அதன் பிறகு அவர் நடித்து வந்த படங்கள் தொடர் தோல்வியை தழுவின.
கடைசியாக வெளிவந்த டாணாக்காரன் படம் தான் விக்ரம் பிரபுவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் 'நோட்டா' பட இயக்குனர் ஆனந்த் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.