மேலும் செய்திகள்
காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம்
260 days ago
திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ்
260 days ago
கடந்த ஆண்டு தமிழில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யாப், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் இந்தியாவை கடந்து சீனாவிலும் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்தது.
இந்நிலையில் நிதிலன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, சமீபத்தில் மும்பையில் அனுராக் மகள் திருமணத்தில் அவரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் அலெஜாண்ட்ரோ தன்னை அவர் படத்தில் நடிக்க அழைத்துள்ளதாகவும் அதற்கு காரணம் 'மகாராஜா' படம் தான் என்றும் கூறினார். இதை கேட்டு எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
260 days ago
260 days ago