ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
ADDED : 262 days ago
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த படம் ஜெயிலர். 650 கோடி வசூலித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று பொங்கலையொட்டி இந்த படத்தின் டீசரை வெளியிட்டு அதை உறுதிப்படுத்தி உள்ளார்கள். இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் இடம் பெற்றாலும், வேறு சில புதிய முகங்களும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் ஜெயிலர் 2 படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே தமிழில் காற்று வெளியிடை, இவன் தந்திரன், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, என பல படங்களில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது ஆர்யன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.