உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதியில் மாற்றம்?

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதியில் மாற்றம்?

ராயன் படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனராக மூன்றாவது படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார். இவருடன் இணைந்து அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ், ஆர். கே. புரொடக்சன்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படம் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்திருந்தனர். தற்போது அஜித் குமாரின் 'விடாமுயற்சி' படம் பிப்ரவரி 6ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ள நிலையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ஒருவாரம் முன்னதாக ஜனவரி 30ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !