உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கைதி- 2 படத்துக்கு கூட்டணியை மாற்றும் லோகேஷ் கனகராஜ்

கைதி- 2 படத்துக்கு கூட்டணியை மாற்றும் லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், அதன்பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களைத் தொடர்ந்து தற்போது ரஜினி நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி-2 படத்தை அவர் இயக்கப் போகிறார். ஆனால் மாஸ்டர் படத்திலிருந்து கூலி படம் வரை நான்கு படங்களில் அனிருத்துடன் இணைந்து பணியாற்றியுள்ள லோகேஷ் கனகராஜ், கைதி 2 படத்தில் அனிருத்துக்கு பதிலாக சாம்.சிஎஸ்-ஐ ஒப்பந்தம் செய்திருக்கிறார். இவர்தான் கைதி படத்திற்கும் இசையமைத்திருந்தார். அப்படத்தில் இவரது பின்னணி இசை பேசப்பட்டது. அதன் காரணமாகவே கைதி படத்திற்கு மீண்டும் சாம்.சிஎஸ்-ஐ இசையமைக்க வைக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !