மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
235 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
235 days ago
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஹரி ஹர வீர மல்லு. இந்த படத்தை ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஆகிய இருவரும் இயக்கியுள்ளார்கள். இப்படத்தில் பவன் கல்யாணுடன் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், நாசர் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, கீரவாணி இசையமைத்திருக்கிறார். இந்தப்படம் கிபி 16ம் நூற்றாண்டு பின்னணி கதையில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு தத்துவ பாடலை பவன் கல்யாண் பின்னணி பாடி இருக்கிறார். இந்த பாடலின் தமிழ் பதிப்பை பா.விஜய் எழுதியுள்ளார். மேலும் தெலுங்கில் பவன் கல்யாண் சொந்த குரலில் பாடியுள்ள இந்த பாடலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மற்ற மொழிகளுக்கும் அவரது குரலை பயன்படுத்தியுள்ளார்கள். கேட்கணும் குருவே என்று தொடங்கும் இந்த பாடல் ஜனவரி 17-ம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
235 days ago
235 days ago