உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தல வந்தால் தள்ளி தான் போகனும் - டிராகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல வந்தால் தள்ளி தான் போகனும் - டிராகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!


'ஓ மை கடவுளே' பட இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துவின் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'டிராகன்' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கின்றார்.

இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஷ்கின், கவுதம் மேனன்,வி.ஜே. சிந்து, ஷர்சத் கான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே இத்திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்திருந்தனர். தற்போது ' விடாமுயற்சி' படம் பிப்ரவரி 7ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளதால் டிராகன் படம் சற்று தள்ளி பிப்ரவரி 21ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். 'தல' வந்தால் தள்ளி தானே போகனும் என பிரதீப் ரங்கநாதன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதே தேதியில் தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !