உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் கதையில் விஷால்?

விஜய் கதையில் விஷால்?


கடந்த 2011ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருந்த படம் ' யோஹன் அத்தியாயம் ஒன்று' . அதன் பிறகு ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. இதுவரை இப்படத்தை கவுதம் மேனன் உருவாக்கவில்லை. கவுதம் மேனன் இயக்கத்தில் விஷால் அடுத்து நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது இதுகுறித்து கிடைத்த கூடுதல் தகவலின்படி, விஷாலை வைத்து கவுதம் மேனன் இயக்கும் படம் ‛யோஹன் அத்தியாயம் ஒன்று' கதைதானாம். இப்போது இந்த காலகட்டத்திற்காக இக்கதையில் நிறைய மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !