உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தண்டேல் படத்தை தமிழகத்தில் வெளியிடும் பிரபல நிறுவனம்!

தண்டேல் படத்தை தமிழகத்தில் வெளியிடும் பிரபல நிறுவனம்!


கார்த்திகேயா பட இயக்குனர் சன்டோ மோன்டீடி நடிகர் நாக சைதன்யாவை வைத்து 'தண்டேல்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மீனவர்கள் சமூகத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கின்றார்.

இத்திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது .இந்த படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தற்போது இப்படத்தை பிரபல நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தமிழகத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !