மறுபரிசீலனை செய்யும் விஜய் ஆண்டனி
ADDED : 257 days ago
தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளர் ஆக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பிறகு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், படத்தொகுப்பாளர் போன்ற பல அவதாரங்கள் எடுத்து பிஸியாக வலம் வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் இவர் இசையமைப்பில் விஷால் நடித்த மதகஜராஜா படம் 12 ஆண்டுகள் தாமத்திற்கு பின் இந்த பொங்கலுக்கு வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது. இதன் பாடல்களுக்கு மற்றும் பின்னனி இசைக்கு ரசிகர்கள் தந்த ஆதரவால் விஜய் ஆண்டனி இசையமைக்க பட வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். இதனால் அவர் நடிக்கும் படங்களை தாண்டி வெளி படங்களுக்கு இசையமைக்க வேண்டாம் என்று எடுத்த முடிவை விஜய் ஆண்டனி மறுபரிசீலனை செய்து அவரது நெருங்கிய நண்பர்களிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.