உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'குடும்பஸ்தன்' எனது சொந்தக் கதை : இயக்குனர் சொல்கிறார்

'குடும்பஸ்தன்' எனது சொந்தக் கதை : இயக்குனர் சொல்கிறார்

குட்நைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த மணிகண்டனின் அடுத்த படமாக 'குடும்பஸ்தன்' வருகிற 24ம் தேதி வெளியாகிறது. மணிகண்டன் உடன் சான்வே மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். வைசாக் இசையமைத்திருக்க, சுஜித் என் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி கூறியதாவது : என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து உருவான கதை 'குடும்பஸ்தன்'. நானும் பிரசன்னா பாலச்சந்திரனும் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதத் தொடங்கினோம். கதையாக எழுதும்போதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்வையாளர்கள் தங்களுடன் நிச்சயம் பொருத்திப் பார்ப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புடன் கூடிய ஆனந்தமான அனுபவம். இந்தக் கதையில் நம் கதாநாயகன் திருமணத்திற்குப் பிறகு சந்திக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குடன் காட்டியிருக்கிறோம். நம் பக்கத்து வீட்டுப் பையன் போலவே இருக்கும் மணிகண்டன் படத்தில் தனது தேர்ந்த நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்வார். தனது நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்துள்ளார். இந்த படத்தை ஊக்குவித்த தயாரிப்பாளர் வினோத் குமாருக்கு எனது மனமார்ந்த நன்றி. குடும்பஸ்தன் சிரிப்பு விருந்தாக மகிழ்ச்சியான அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !