உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் சைப் அலிகான்

வீட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்தும் சைப் அலிகான்

பாலிவுட் நடிகரான சைப் அலிகான் கடந்த வாரம் அவரது வீட்டில் திருட வந்த ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுசை சிகிச்சை முடிந்த பின் நேற்று வீட்டிற்குத் திரும்பினார்.

தற்போது அவருடைய வீட்டிற்கான பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார் சைப் அலிகான். பாலிவுட் நடிகரான ரோனித் ராய்க்கு சொந்தமான செக்யூரிட்டி நிறுவனம் அவரது வீட்டு பாதுகாப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாம். இதற்காக ரோனித் ராய் நேற்று சைப் அலிகானை சந்தித்துப் பேசியுள்ளார். அமிதாப்பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் ஆகியோரது வீட்டிற்கு ரோனித் ராயின் செக்யூரிட்டி நிறுவனம்தான் பாதுகாப்பை அளித்து வருகிறது.

சைப் அலிகான் வீட்டில் நடந்த திருட்டு முயற்சியும் அதனால் நடந்த கத்திக்குத்து சம்பவமும் பாலிவுட் பிரபலங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !