உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் 2025 போட்டியில் ஒரே ஒரு ஹிந்தி குறும்படம்

ஆஸ்கர் 2025 போட்டியில் ஒரே ஒரு ஹிந்தி குறும்படம்

உலக அளவில் பிரபலமான திரைப்பட விருதுகளாக அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இருக்கிறது. கடந்த வருடம் வெளிவந்த படங்களுக்கான விருதுகள் மார்ச் மாதம் நடைபெற உள்ள விழாவில் வழங்கப்படும்.

அதில் ஹிந்தி மொழியில் ஒரே ஒரு குறும்படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா இணைந்து தயாரித்துள்ள 'அனுஜா' என்ற குறும்படம் 'சிறந்த லைவ் - ஆக்ஷன் குறும்படப் பிரிவில்' போட்டியிடத் தேர்வாகி உள்ளது.

இந்த குறும்படத்தை 2023க்காக சிறந்த டாகுமெடன்டரி படத்திற்கான ஆஸ்கர் விருது வென்ற 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' படத்தைத் தயாரித்த குனித் மோங்காவும் இணைந்து தயாரித்துள்ளார்.

ஆடம் ஜே கிரேவ்ஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனுஜா கதாபாத்திரத்தில் சஜ்தா பதான் நடித்துள்ளார். டில்லியில் உள்ள ஒரு ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் 9 வயதான பெண் அனுஜா பற்றிய குறும்பம் இது.

அனுஜா படத்துடன் “ஏலியன், ஐயாம் நாட் ஏ ரோபோட், தி லாஸ் ரேஞ்சர், எ மேன் ஊ உட் நாட் ரிமைன் சைலன்ட்” ஆகிய நான்கு படங்களும் ஆஸ்கர் விருதுக்காகப் போட்டி போடுகிறது.

'அனுஜா' படம் ஹிந்தி மொழி குறும்படம் என்றாலும் அமெரிக்க குறும்படமாகவே போட்டியில் இடம் பெறுகிறது. இதற்கு முன்பு மூன்று சர்வதேச குறும்படப் போட்டிகளில் இது விருதுகளை வென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !