லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட்
ADDED : 252 days ago
மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான பிருத்விராஜ் முதன்முறையாக இயக்கிய படம் 'லூசிபர்'. இதில் மோகன்லால் நாயகனாக நடித்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இதன் அடுத்த பாகம் மீண்டும் இவர்கள் கூட்டணியில் தற்போது 'எம்புரான்' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், இயக்குனர் பாசில், சச்சின் கெடேகர், கலாபவன் சாஜன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். தீபக் தேவ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 27ம் தேதி அன்று மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது இந்த படத்தின் டீசர் வருகின்ற ஜனவரி 26ந் தேதி மாலை 7.07 மணியளவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.