உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி

‛‛நீங்க எல்லாரும் இல்லாம விருது கிடைத்திருக்காது'': பத்ம பூஷன் விருது பெற்றி ஷோபனா நெகிழ்ச்சி


நமது நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம விபூஷண், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான விருதுகளை மத்திய அரசு நேற்று (ஜன.,25) வெளியிட்டது.

இதில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம பூஷன் விருது பெறுவது தொடர்பாக நடிகை ஷோபனா கூறுகையில், ‛‛மத்திய அரசு எனக்கு பத்ம பூஷன் விருது அறிவித்து கவுரவித்துள்ளது. இதற்காக இந்திய அரசு, விருது தேர்வு கமிட்டி, என் பெற்றோர்கள், குரு உள்ளிட்டோருக்கெல்லாம் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக என் நண்பர்கள், ரசிகர்கள் என இவர்கள் இல்லாமல் எனக்கு இந்த விருது கிடைத்திருக்காது. நான் தற்போது மும்பையில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அதனால் எல்லோரையும் சந்தித்து பேச முடியவில்லை. சென்னை ஜன.,29ல் வருகிறேன். அப்போது அனைவரையும் சந்திக்கிறேன். ஆதரவளித்தவர்களுக்கு நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !