அக்ஷய்குமாரை மீட்டெடுக்கும் 'ஸ்கை போர்ஸ்'
ADDED : 222 days ago
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அக்ஷய்குமார். ஆனால், கடந்த நான்கு வருடங்களாக அவருடைய படங்கள் பெரும் வசூலைக் குவிக்காமல் தடுமாறி வருகின்றன. 2020ல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த 'லட்சுமி' படத்திலிருந்து தொடர்ந்து அவர் நடிப்பில் வெளிவந்த பத்துக்கும் மேற்பட்ட படங்கள் தோல்வியடைந்தன. 'சூர்யவன்ஷி' படம் மட்டுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடந்த வாரம் அவரது நடிப்பில் வெளியான 'ஸ்கை போர்ஸ்' படம் வார இறுதியோடு சேர்த்து 70 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படத்திற்கான விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக வந்துள்ளதாலும், ரசிகர்களுக்குப் படம் பிடித்திருப்பதாலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகிறது. இதன் மூலம் இந்தப் படம் அக்ஷய் குமாரை மீட்டெடுக்கும் என பாலிவுட்டினர் பெரிதும் நம்புகிறார்கள்.