மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
222 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
222 days ago
பழம்பெரும் தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “ஜுபிடர் பிக்சர்ஸ்” நிறுவனத்தின் உரிமையாளரான சோமு, தான் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்திற்கு கதை வசனம் எழுதி படத்தை இயக்கித் தருமாறு இயக்குநர் ஏ எஸ் ஏ சாமியிடம் கூற, இயக்குநர் ஏ எஸ் ஏ சாமியும் அதை ஏற்றுக் கொள்ள, பொறுப்பினை தந்த தயாரிப்பாளர் 'ஜுபிடர்' சோமு இரண்டு நிபந்தனைகளையும் விதித்திருந்தார்.
முதலில் கதையை எழுதிக் காட்டுங்கள் கதை பிடித்திருந்தால் அதன்பின் இயக்கம். மேலும் அன்றைய காலகட்டத்தில் மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த “ஆர்யமாலா”, “ஜெகதலப்பிரதாபன்” போன்ற திரைப்படங்களின் கதையைப் போல் இருக்க வேண்டும் என்றும், படத்தில் இடம் பெறும் குறிப்பிட்ட முக்கியமான வேடங்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் தங்களது 'ஜுபிடர்' நிறுவனத்தில் மாத சம்பளத்தில் பணிபுரியும் கலைஞர்களையே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க, அக்காலத்தில் மந்திர தந்திர காட்சிகளை படமாக்குவதில் கைதேர்ந்த ஒளிப்பதிவாளரான வி கிருஷ்ணனுடன் கலந்து பேசி, ஒரு ராஜா ராணிக் கதையை தயார் செய்து தயாரிப்பாளர் சோமுவிடம் படித்துக் காட்டினார் இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி.
கதை, தயாரிப்பாளர் சோமுவிற்கு பிடித்து விட, படத்திற்கு “ராஜகுமாரி” என்ற பெரையும் சூட்டி, நாயகனாக பி யு சின்னப்பாவையும், நாயகியாக டி ஆர் ராஜகுமாரியையும் நடிக்க வைக்கலாம் என்ற யோசனையையும் தந்தார் தயாரிப்பாளர் சோமு. தனது முதல் படத்திலேயே பெரிய நடிகர்களை வைத்து பரிசோதனை செய்ய விரும்பாத இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி, குறைந்த முதலீட்டில் சாதாரண நடிகர்களை வைத்து படத்தை தயாரிக்கலாம் என்ற தனது விருப்பத்தைக் கூற, சரி, கதாநாயகன், கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளர் சோமு கேட்க, “ஸ்ரீமுருகன்” என்ற படத்தில் எம் ஜி ஆரும், நடிகை மாலதியும் பரமசிவன் - பார்வதியாக அற்புதமாக நடித்திருக்கின்றனர். ஆனந்தத் தாண்டவம் ஒன்றை மெய்சிலிர்க்கும் வண்ணம் அபாரமாக ஆடியுமிருக்கின்றனர். அவர்களது ஜோடிப் பொருத்தமும், ஆட்டமும், முகபாவங்களும் பார்க்கும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது. அவர்கள் இருவரையும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்று ஏ எஸ் ஏ சாமி சொல்ல, செய்தி பரவியது.
கிடைத்த துணை வேடங்களை ஏற்று, அன்று வளர்ந்து வரும் நடிகராக இருந்துவந்த நடிகர் எம் ஜி ராமச்சந்திரனின் செவிகளுக்கும் எட்டியது செய்தி. என்ன சாமி? நாம் எடுக்க இருக்கும் “ராஜகுமாரி” திரைப்படத்திற்கு கதாநாயகனாக நம் ராமச்சந்திரனையே போடலாம் என்கிறீர்களா? என தயாரிப்பாளர் சோமு, ஏ எஸ் ஏ சாமியிடம் கேட்க, நீங்கள் ஆதரவும், ஊக்கமும் அளித்தீர்கள் என்றால் ராமச்சந்திரனையே கதாநாயகனாகப் போட்டு படத்தை வெற்றிகரமாக எடுத்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று ஏ எஸ் ஏ சாமி கூற, அதற்கான பணிகள் துவங்கின. எம் ஜி ராமச்சந்திரன் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னாளில் வெள்ளித்திரையின் நிரந்தர ராஜகுமாரனாக எம் ஜி ஆர் நிலைத்து நிற்க அடித்தளமிட்ட அற்புத திரைக்காவியம்தான் இந்த “ராஜகுமாரி”.
222 days ago
222 days ago