ரஜினியை இயக்க வந்த வாய்ப்பு குறித்து பிரித்விராஜ்
ADDED : 271 days ago
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்புரான்'. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் சிறப்பு விருந்தினராக மம்மூட்டி கலந்து கொண்டார்.
அப்போது பிரித்விராஜ் மேடையில் கூறுகையில், லைகா நிறுவனர் சுபாஸ்கரண் என்னிடம் லைகா நிறுவனத்திற்காக ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க முடியுமா ? என கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், நான் ஒரு பகுதி நேர இயக்குனர். என்னால் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரஜினிக்கான கதையை தயார் செய்ய முடியாது என்பதால் அந்த படம் நடைபெறவில்லை. அதேசமயம் சுபாஸ்கரணுடன் நட்பு தொடர்ந்து இன்று எம்புரான் உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.