கார்த்தியுடன் மூன்றாவது முறையாக இணையும் ரஜிஷா விஜயன்
ADDED : 289 days ago
மலையாள நடிகை ரஜிஷா விஜயன் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். தமிழிலும் கர்ணன், சர்தார் 1, ஜெய் பீம் உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ரஜிஷா விஜயன் கார்த்தியுடன் மூன்றாவது முறையாக இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்தை கார்த்தியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இதில் ரஜிஷா விஜயன் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கார்த்தியுடன் சர்தார் 1 படத்தில் நடித்துள்ளார் மற்றும் சர்தார் 2ம் பாகத்திலும் ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.