உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்?

ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்?

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமீர்கான். அவருக்கு ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவகாரத்து ஆகியுள்ளது. 1986ல் அவரது சிறு வயது தோழியான ரீனா தத்தா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2002ல் விவகாரத்து செய்தார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

பின்னர் 2005ல் உதவி இயக்குனராக இருந்த கிரண் ராவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் ஆமீர். அவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் ஒரு மகன் இருக்கிறார். 2021ல் இருவரும் பிரிந்தனர். இருந்தாலும் கிரண் ராவிற்கு பக்கபலமாக இருக்கிறார் ஆமீர்கான். அவர் இயக்கிய 'லபாட்டா லேடீஸ்' படத்தையும் ஆமீர் தயாரித்தார்.

இந்நிலையில் தற்போது பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வருவதாகவும் விரைவில் அவரைத் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் பாலிவுட் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் 60 வயதை நிறைவு செய்ய உள்ளார் ஆமீர்கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !