நாளை வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு!
ADDED : 328 days ago
தற்போது நயன்தாரா நடிப்பில் ‛மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டெஸ்ட், டியர் ஸ்டூடண்ட் , ராக்காயி, டாக்ஸிக்' போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. இந்தப் படங்களில் சசி காந்த் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் படம் ‛டெஸ்ட்'. இப்படத்தில் நயன்தாராவுடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருக்கிறது.
இந்த படம் தியேட்டருக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பிப்ரவரி மூன்றாம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.