மீண்டும் அஜித், அர்ஜுன், திரிஷா கூட்டணி 'விஸ்வரூப வெற்றி' பெறுமா?
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. 2023 பொங்கலுக்கு வெளிவந்த 'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடித்த ஒரு படம் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வெளியாகிறது.
இந்தப் படத்தில் 'மங்காத்தா' படத்தின் முக்கிய கூட்டணியான அஜித், அர்ஜுன், திரிஷா மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றுள்ளது. காணாமல் போன மனைவி திரிஷாவை அஜித் தேடுவதுதான் படத்தின் கதை.
தொடர்ந்து சில தோல்விகளைக் கொடுத்து வந்த அஜித்துக்கு 'மங்காத்தா' படம் பெரும் திருப்புமுனையைக் கொடுத்தது. அந்தப் படத்தின் ஒரு கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படம் போலவே இந்தப் படமும் பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.