மூன்றாவது மகன் பவனுக்கு காது குத்து விழா நடத்திய சிவகார்த்திகேயன்
ADDED : 305 days ago
அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை தொடர்ந்து சுதா இயக்கும் பராசக்தி படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் இருந்த நிலையில் மூன்றாவதாக பவன் என்ற மகன் பிறந்தான்.
இந்நிலையில் தனது மூன்றாவது மகன் பவனுக்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மகா மாரியம்மன் என்ற தனது குலதெய்வம் கோவிலில் காதணி விழா நடத்தி உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளார்கள்.