உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகளுடன் படப்பிடிப்பு செட்டுக்கு சென்ற ராம்சரண்

மகளுடன் படப்பிடிப்பு செட்டுக்கு சென்ற ராம்சரண்

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி பாக்ஸ் ஆபீசில் ஏமாற்றத்தை கொடுத்தது. அடுத்தபடியாக உப்பெனா படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்கும் தனது 16வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் ராம்சரண். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தனது 16வது படத்தின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட செட் பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து தனது மகள் கிளின் காராவுடன் சென்று பார்வையிட்டுள்ளார் ராம்சரண். அது குறித்த புகைப்படத்தை தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவர், ஆர்சி 16 செட்டில் எனது சிறிய விருந்தினர் என்று ஒரு பதிவு போட்டுள்ளார். ராம் சரணின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி உள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !