ஷாருக்கானின் மகன் இயக்கும் வெப் சீரிஸில் பாலிவுட் பிரபலங்கள்
ADDED : 323 days ago
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் தி பேட்ஸ் ஆப் பாலிவுட் என்ற ஒரு வெப் சீரிஸை இயக்கி வருகிறார். இதை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனமே தயாரிக்கிறது . இந்த தொடர் குறித்து தகவலை சமீபத்தில் ஷாருக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இதில் லக்ஷயா, பாபி தியோல் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், கரன் ஜோகர் மற்றும் இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலர் இந்த தொடரில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஜூன் மாதம் முதல் நெட் பிளிக்சில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடரை பெரிய அளவில் விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.