சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு
ADDED : 232 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'ரெட்ரோ'. அவருடன் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் மே 1ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 13) 'ரெட்ரோ' படத்தின் 'கண்ணாடி பூவே' என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார். சிறையில் இருக்கும் சூர்யா, காதலியை நினைத்து பாடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல் தற்போது வைரலாகியுள்ளது.