முதல் முறையாக தனுஷ் படத்தில் இணைகிறாரா அர்ஜூன்?
ADDED : 275 days ago
நடிகர் அர்ஜூன் 90ஸ், 2000ம் ஆரம்ப கால கட்டத்தில் முன்னனி கதாநாயகராக வலம் வந்தவர். கடந்த சில வருடங்களாக அர்ஜூன் கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் மங்காத்தா, விடாமுயற்சி, லியோ, இரும்புத்திரை போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 'போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர் பெரும் தொகையாக சம்பளமாக கேட்கிறார் என கூறப்படுகிறது.