கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி?
ADDED : 601 days ago
உதயநிதி ஸ்டாலினின் மனைவி மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'காதலிக்க நேரமில்லை' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதற்கடுத்து கிருத்திகா உதயநிதி அடுத்து இயக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து கதை கூறியுள்ளார். அந்த கதை விஜய் சேதுபதிக்கு பிடித்து போனதால் அடுத்த கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர் என கூறப்படுகிறது.