மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
223 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
223 days ago
மலையாள சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் காமெடி நடிகர் ரெஜி. 52 வயதான இவர் பல படங்களில் சிறிய கேரக்டர்களிலும், சில படங்களில் பெரிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோட்டயம் அருகே சினிமாவில் நடிக்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து ரெஜி மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு ஈராற்றுபேட்டை அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ரெஜிக்கு 136 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், 1 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது . அபராதத் தொகையில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவித்தாலும் அவர் சாகும் வரை சிறையியிலையே இருக்க வேண்டியது வரும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
223 days ago
223 days ago