உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானியின் ‛ஹிட் 3' படத்தின் டீசர் அப்டேட் வெளியானது

நானியின் ‛ஹிட் 3' படத்தின் டீசர் அப்டேட் வெளியானது

கடந்த 2020ம் ஆண்டில் தெலுங்கில் சைலேஷ் கொலனு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ' ஹிட் தி பர்ஸ்ட் கேஸ்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த 2022ல் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக ஹிட் தி செகண்ட் கேஸ் வெளியாகி மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது.

இந்த படத்தின் இறுதியில் நடிகர் நானி மூன்றாம் பாகத்திற்கான லீட் காட்சியில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி நடிப்பில் 'ஹிட் தி தெர்ட் கேஸ்' படம் உருவாகி வருகிறது என அறிவித்தனர். வரும் மே 1ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது.

இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கின்றார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 24ம் தேதி அன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !