ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ஹிந்தி படம்
ADDED : 249 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த 2013ம் ஆண்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் நடித்து வெளிவந்த படம் 'ராஞ்சனா'. இந்த படத்தின் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்தார். அப்போது வரவேற்பை இந்த படம் பெற்றது. அதன் பிறகு தனுஷ் ஹிந்தியில் ஷமிதாப், அட்ராங்கி ரே படங்களில் நடித்தார். தற்போது தேரே இஸ்க் மெயின் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களைக் கடந்த நிலையில் ராஞ்சனா படம் வருகின்ற பிப்ரவரி 28ம் தேதி அன்று பி.வி.ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் இந்தியளவில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.