அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அக்ஷய் குமார்
ADDED : 198 days ago
தமிழில் ராக்கி, சாணி காகிதம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். ஆனால் இந்த படங்கள் எதுவும் கமர்ஷியல் ஆக வெற்றி பெறவில்லை. தனுஷை வைத்து இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்க இருந்தார். இதற்கான அறிவிப்பு விழா சென்னையில் நடந்த நிலையில் சில பிரச்னையால் இந்த படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க அருண் மாதேஸ்வரன் முயற்சித்து வந்தார். இதனை சரிதா அஸ்வின் வர்தே என்பவர் ரேவ் ரிவர் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க அக்ஷய் குமாரை சந்தித்து இவர் கதை கூறியுள்ளார். அக்ஷய் குமாருக்கும் கதை பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.