மேலும் செய்திகள்
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
222 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
222 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
222 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
222 days ago
சென்னையில் நடைபெற்ற 'பிக்கி (FICCI) எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கருத்தரங்கில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் FICCI ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (தெற்கு) அமைப்பின் தலைவராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கமல், த்ரிஷா இணைந்து கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். அப்போது “தக் லைப் படத்தில் ரங்கராஜ சக்திவேல் நாயக்கர், நல்லவரா கெட்டவரா?” என்று கமலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நான் திரும்ப மணிரத்னம் சாரை சந்திக்க வேண்டாமா? என்ன சார் கஷ்டப்பட்டு எடிட் எல்லாம் செய்துக் கொண்டிருக்கிறேன். எடிட்டே இல்லாமல் மொத்த கதையையும் தட்டிவிட்டீர்களே என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும். அந்தப் படம் பார்த்தீர்கள் என்றாலும் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்காது. அவர் நல்லதும் கெட்டதும் சேர்ந்தவர் தான்” என்று அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
222 days ago
222 days ago
222 days ago
222 days ago