மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
195 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
195 days ago
'கேஜிஎப், சலார்' படங்களை இயக்கிய கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல் அடுத்ததாக ஜுனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படம் ஒன்றை இயக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் ஆரம்பமானது. அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் கலந்து கொள்ள உள்ளார்.
ஜுனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு 2022ம் ஆண்டு அவரது பிறந்தநாளின் போது வெளியானது. 2023 ஏப்ரல் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால் இப்போது தான் ஆரம்பமாகி உள்ளது.
இப்படத்தின் தலைப்பு மே 20 அன்று ஜூனியர் என்டிஅரின் பிறந்தநாள் அன்று வெளியாகும் எனத் தெரிகிறது. படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்திருப்பதாக இயக்குனர் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அது தற்காலிக தலைப்பு தான் என்கிறார்கள். கடந்த வாரம் தமிழில் வெளி வந்த டிராகன் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மீண்டும் ஒரு டிராகன் வருமா என்பது விரைவில் தெரிந்து விடும்.
195 days ago
195 days ago