மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
218 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
218 days ago
தெலுங்கு இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'குபேரா'. இப்படத்தின் தலைப்புக்குத் தற்போது புதிய சிக்கல் வந்துள்ளது.
கரிமகொன்ட நரேந்தர் என்ற தெலுங்குத் தயாரிப்பாளர், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நவம்பர் 2023ல் 'குபேரா' என்ற தலைப்பைப் பதிவு செய்துள்ளதாகவும், படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
'குபேரா' தலைப்பை சேகர் கம்முலா மாற்ற வேண்டும் என்றும் அல்லது தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும், இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளாராம்.
சேகர் கம்முலா இயக்கி வரும் 'குபேரா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சமயத்தில் தலைப்புப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
218 days ago
218 days ago