மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
212 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
212 days ago
சர்தார் படத்தை அடுத்து மீண்டும் பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் -2 படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இந்த படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு முக்கிய சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. நேற்று அந்த காட்சியில் கார்த்தி நடித்தபோது எதிர்பாராத விதமாக அவரது காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். அதையடுத்து அவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துள்ளார்கள். கூடவே அவரது கால் வீங்கி விட்டதால் அவரை ஒரு வாரம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து கார்த்தி சென்னை திரும்பிவிட்டார். இதன் காரணமாக தற்போது சர்தார் 2 படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
212 days ago
212 days ago