கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி
                                ADDED :  239 days ago     
                            
                             அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‛டிராகன்'. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த படம் ரூ.100 கோடி வசூலையும் கடந்து சாதித்தது. இந்த படத்தை பார்த்த ரஜினி பாராட்டி உள்ளார். அவருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛அற்புதமா எழுதி இருக்கீங்க என ரஜினி பாராட்டினார். நல்ல படம் பண்ணனும், ரஜினி படத்தை பாராட்டணும், வீட்டுக்கு கூப்பிட்டு பேசணும்... இதெல்லாம் இயக்குனர் ஆக உழைக்கும் பல உதவி இயக்குனர்களின் கனவு. எனது கனவு நிறைவேறிய நாள்'' என தனது மகிழ்ச்சியை குறிப்பிட்டுள்ளார் அஸ்வத்.
அதேப்போல் பிரதீப்பும் ரஜினியை சந்தித்த போட்டோவை பகிர்ந்து, ‛தலைவரின் அந்த சிகரெட் ஸ்டைலை நானும் செய்து முடித்தேன், கடவுளுக்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.