உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ்

ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ்

மலையாளத் திரையுலகத்தில் நடிகரும் இயக்குனருமாக உள்ளவர் பிருத்விராஜ் சுகுமாரன். மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் மகேஷ்பாபுவின் 29வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நடித்துள்ளார். ஆனால், பிருத்விராஜ் இப்படத்தில் நடிப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து கேட்டபோது, மகேஷ்பாபுவுடன் ஒடிஷாவிற்கு சுற்றுலா சென்று வந்தேன் என்று கூறினார். இருப்பினும் அப்படத்தில் நடித்து வருவதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின் மீடியா சந்திப்பில் அது பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிருத்விராஜ் இயக்கி மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் வேலைகளுக்கு இடையிலும் அவர் ராஜமவுலி படத்தில் நடித்துவிட்டு வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !