எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை
ADDED : 214 days ago
பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ள மலையாளப் படமான 'எல் 2 எம்புரான்' படம் அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முன்பதிவு ஆன்லைன் இணையதளங்கள் மூலம் நேற்று காலையில் ஆரம்பமானது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திலேயே ஒரு இணையதளத்தில் மட்டுமே 96 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. இதுவரையில் எந்த ஒரு இந்தியப் படத்திற்கும் இவ்வளவு அதிகமான முன்பதிவு செய்யப்பட்டதில்லை.
அது மட்டுமல்ல 24 மணி நேரத்தில் அந்த ஒரு இணையதளத்தில் மட்டும் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஒரு இந்திய சாதனை என படக்குழு தெரிவித்துள்ளது.