உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்"

நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்"

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படமான டிராகன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியதைத் தொடர்ந்து மார்ச் 21 அன்று நெட்பிளிக்ஸில் திரையிடப்பட்டது. கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

வசூலில் வெற்றியடைந்ததை தொடர்ந்து நேற்று நெட்பிளிக்ஸிலும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய மொழி படங்களில் நேற்று மார்ச் 21 அன்று OTT-யில் வெளியான படங்களிலேயே அதிக பார்வையாளர்கள் பார்த்த படமாக டிராகன் படம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !