மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
194 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
194 days ago
மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் வரும் மார்ச் 27ம் தேதி எம்புரான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இது கடந்த 2019ல் இவர்கள் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லூசிபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் மூன்றரை நிமிட டிரைலர் வெளியானது. இதை பார்த்து அனைவருமே பாராட்டுக்களை தெரிவித்து வருவதுடன் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.. அது மட்டுமல்ல ரஜினிகாந்த், ராஜமவுலி போன்ற பிரபலங்களும் இந்த டிரைலரை பார்த்து விட்டு பாராட்டியுள்ளனர்.
குறிப்பாக ராஜமவுலி இந்த டிரைலரின் முதல் ஷாட்டை பார்க்கும் போதே இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி என்பது தெரிகிறது என பாராட்டியுள்ளார். இந்த நிலையில் எம்புரான் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லாலுக்கு ரிலீசாக இருக்கும் படம் தொடரும். இதை இயக்குனர் தருண மூர்த்தி இயக்கியுள்ளார். தற்போது இவரும் எம்புரான் டீசரை பார்த்து விட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் பிரித்விராஜ் இந்த அளவிற்கு பிரமிக்க வைத்துள்ளாரே.. இப்போ நான் என்ன பண்றது என வடிவேலு பாணியில் ஒரு கமெண்ட்டை பதிவிட்டுள்ளார்.
இதற்கு உங்களுடைய படத்தையும் பார்ப்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன் என பிரித்விராஜ் கூறியுள்ளார். எம்புரான் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள நிலையில் தொடரும் படம் ஒரு சென்டிமென்ட் பேமிலி டிராமாவாகத்தான் உருவாகியுள்ளது. எம்புரான் படத்தைப் போல அந்த படத்திலும் எப்படி மோகன்லால் ரசிகர்களை திருப்திபடுத்தப் போகிறேன் என்கிற விதமாகத்தான் அவரது கமெண்ட் அமைந்துள்ளது.
194 days ago
194 days ago