டியர் ஸ்டூடன்ட்ஸ் படப்பிடிப்பு முடிந்தது
ADDED : 196 days ago
மாதவனுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள டெஸ்ட் என்ற படம் வருகிற ஏப்ரல் நான்காம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதையடுத்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டாக்சிக், ராக்காயி, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாளத்தில் நிவின் பாலி உடன் அவர் நடித்து வந்த டியர் ஸ்டூடன்ட்ஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, அப்படத்தின் மேக்கிங் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு நிறைவின்போது படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோவை நடிகர் நிவின் பாலி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் வித்யா ருத்ரன் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. இதை சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் ராய் இயக்கி உள்ளனர்.